×

அப்போலோ டாக்டர்களின் சாதனையால் ரத்த ஓட்ட குறையால் பக்கவாதம் பாதித்த 22 பேரின் நோய் தீர்வு: டாக்டர் கார்த்திகேயன் பேட்டி

சென்னை: குருதியோட்டக் குறை  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 22 பேருக்கு தீவிர சிகிச்சை மூலம் தீர்வு காணப்பட்டது. இதை அப்போலோ டாக்டர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். குருதியோட்டக்குறை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் 22 பேருக்கு பக்கவாத நோய் சரி செய்யப்பட்டது குறித்து அப்போலோ டாக்டர் கார்த்திகேயன் கூறினார். சென்னையில் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் குருதியோட்டக் குறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 20 முதல் 80 வயதுக்கு இடைப்பட்ட 22 பேரை சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன் காப்பாற்றியுள்ளார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை அப்பல்லோ மருத்துவமனையில், மூத்த இதய நோய் சிகிச்சை நிபுணர் கார்த்திகேயன் மேற்பார்வையில் கடந்த சில மாதங்களில் மட்டும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 22 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 50 சதவீதம் பேர் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலான பக்க வாதங்கள் (85 சதவீதம்) மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்படுவதால் ஏற்படுகின்றன. கட்டிகள் மற்றும் ரத்த உறைவு காரணமாக இது ஏற்படக் கூடும். வழக்கமாக இது குருதியோட்டக் குறை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுவதால் சுற்றியுள்ள மூளை செல்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். பின்னர் அப்போலோ மருத்துவமனையில் மேற்ெகாள்ளப்படும் சிகிச்சை குறித்து டாக்டர் கார்த்திக்கேயன் கூறியதாவது: மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கங்களில் மாற்றங்கள் போன்றவையே இதய மற்றும் மூளை நோய்களுக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இளைஞர்கள் பலர் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை பளுவால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

பலர் கால தாமதமாக தூங்குவது, மாறுபட்ட ஷிப்ட் முறையில் பணி புரிவது போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவையே இளைஞர்களை பக்கவாதம் தாக்க அதிக காரணங்களாக அமைந்துள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் இந்த வகையால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். பக்கவாதம் தாக்கியவர்களை 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது அவசியம். இவ்வாறு டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthikeyan ,apollo doctors , Apollo Doctor, achievement, Disease Solution, Dr. Karthikeyan
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...