×

ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கு (D.T.Ed) தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்த தேதியில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டம் என்னும் தட்கல் திட்டத்தின் கீழ் தற்போது  விண்ணப்பிக்கலாம்  என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக ஜூன் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை தேர்வு நடக்க உள்ளது. முதலாம் ஆண்டு மற்றும்  இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது தட்கல் திட்டத்தின் கீழ்  விண்ணப்பிக்கலாம்.

 www.dge.tn.gov.in  என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து, கடந்த  முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றுகளை இணைத்து, அந்தந்த மாவட்ட  ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மே 2 மற்றும் 3ம் தேதிகளில் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். தட்கல் திட்ட அனுமதி கட்டணம்  ரூ.1000 செலுத்த வேண்டும். ஒரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண்  சான்று (முதலாண்டு) ரூ.100, மதிப்பெண் சான்று (இரண்டாம் ஆண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த  வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Teacher Training Chart Choice, Thadkal
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...