சென்னை: சென்னை கோட்டை அருகே உள்ள அன்னை சத்யா நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ேநற்று முன்தினம் இரவு அன்னை சத்யா நகரில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்குள்ள நியாய விலைக்கடை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் சிலர் வந்து சென்றனர். போலீசார், அங்கு சென்றபோது, பெண் ஒருவர் கையில் பையுடன் ஓடினார். அவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலங்களில் 600 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த இளவரசி (51) என்பதும், இவர், வாலிபர்களை குறிவைத்து தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரை கைது ெசய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
