×

சாரி... தப்பு நடந்து போச்சு!

ஒடிசா மக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் இனி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அங்கு நான்காவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த தேர்தல்  திருவிழா இன்றோடு முடிவுக்கு வருகிறது. தேர்தல் ரேசில், ஆளும் பிஜேடி (பிஜூ ஜனதா தளம்) கட்சி முன்னணியில் இருந்தாலும், முதல்வர் நவீனுக்கு பாஜ இம்முறை செம டார்ச்சர் கொடுத்ததை மறுக்க முடியாது. நடந்து முடிந்த மூன்று கட்ட வாக்குப்பதிவில் பல இடங்களில் நடந்த அடிதடி, வன்முறை, வாக்கு இயந்திரங்கள் உடைப்பு போன்ற சம்பவங்களே அதற்குச் சாட்சி. உச்சக்கட்டமாக, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா  மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரெந்தி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவவத்தில் பாஜ வேட்பாளர் நிலமணி கைது செய்யப்பட்டார்.ஏப்ரல் 23ம் நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போதும் நிறைய குளறுபடிகள் நடந்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. ஆளும் பிஜேடி கட்சியும், பாஜவும் ஒருவர் மீது ஒருவர் மா

ற்றி மாற்றி புகார் சொல்லுகிறார்கள். இது எதுக்கு  வம்பு என்று நினைத்தாரோ, என்னவோ... சில குளறுபடிகள் நடந்திருப்பது உண்மைதான் என்று ஒடிசா மாநில தேர்தல் அதிகாரி சுரேந்திரகுமார் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பிய அறிக்கையில், ‘‘3ம் கட்ட வாக்குப்பதிவில் சில இடத்தில் தவறு நடந்தது பற்றி விசாரித்து வருகிறோம். குறிப்பாக, 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு  நடத்துவதற்கு பரிந்துரைக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Worry,bad habit!
× RELATED சொல்லிட்டாங்க…