×

அன்று சுறுசுறுப்பு; இன்று போயேபோச்சு முடிந்தது தேர்தல் மட்டுமல்ல; ஐடி ரெய்டும் தான்: தமிழகத்தில் நடந்த அதிரடி சோதனை எல்லாமே மிரட்டுவதற்காக மட்டுமே நடந்ததா?

கடந்த சில மாதமாக பத்திரிக்கைகளில் பார்த்தால்...அங்கு ரெய்டு...இங்கு ரெய்டு என்ற செய்திகள் தான். அதோ, அவரிடம் கட்டுகட்டாக பறிமுதல் செய்து விட்டனர் ஐடி அதிகாரிகள். இதோ, நாளை இன்னொருவர் வீட்டில் நடக்கப்போகிறது ரெய்டு...இப்படி தினமும் ரெய்டு பற்றிய பரபரப்பு தான். மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே, அப்பாவி மக்கள் முதல் வியாபாரிகள் வரை, நியாயமாக ெகாண்டு போகும் பணம், நகைகளை பிடித்து வைத்து படாதபாடு படுத்தி விட்டது தேர்தல் ஆணையம்.

இன்னொரு பக்கம், வாக்காளர்களுக்கு தர பதுக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகள், அலுவலகங்களில் மட்டும் ரெய்டு. பகிரங்கமாக ஆளும் கட்சியினர் பணத்தை பதுக்கினாலும், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தாலும் தேர்தல் ஆணைய பறக்கும்படையினர் அந்த பக்கம் திரும்பி பார்த்ததே இல்லை. இது பற்றி  எதிர்க்கட்சிகள்  எவ்வளவோ புகார் அளித்தும், வெளிப்படையாக சொல்லியும் எந்த பதிலும் இல்லை. புகார்களை கண்டுகொண்டதும் இல்லை. அப்படித் தான் ரெய்டுகளும் தடாலடியாக  நடத்தப்பட்டன.

எதிர்க்கட்சிகளை பயமுறுத்தவே நடந்தன ரெய்டுகள் என்று சொன்னபோதும் அதை தேர்தல் ஆணையம் மறுத்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் முடிந்தது; அட, அடுத்த நாளே ரெய்டு எல்லாம் மாயமாய் போய் விட்டது. நேற்று வரை நீங்களே பார்த்து கொள்ளுங்கள், எங்காவது ரெய்டு  என்று வருமான வரித்துறை போனதா? அப்படியானால் தேர்தல் தான் காரணமா? வட மாநிலங்களில் பாஜ செல்வாக்கு உள்ள மாநிலங்கள்  அல்லாமல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அப்படித் தான் தென் மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளை மிரட்டவே, அவர்களின் செல்வாக்கை சரிய வைக்க மக்களிடம் தவறான கருத்து பரப்பவே ரெய்டுகள் நடத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. இதோ நான்கு விஐபிக்கள் நான்கு கோணங்களில் அலசுகின்றனர்...

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,IT Reid ,Tamil Nadu , Active, ongoing, ending, election, id raid, action test
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...