×

கையில காசு வரலே... கணக்குல கழிஞ்சு போச்சு: ரிசர்வ் வங்கியில் குவிந்த ‘டிஜிட்டல்’ புகார்கள்

புதுடெல்லி:  வங்கிகளுக்கு நேரில் செல்வதை விட ஏடிஎம், ஆன்லைன் வங்கிச்சேவைகள், மொபைல் ஆப்ஸ் மூலமான பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில் இதுதொடர்பான புகார்களும் வங்கி ஆம்பட்ஸ்மேன்களுக்கு வந்துள்ளன. வங்கி ஆம்பட்ஸ்மேன் திட்டத்தில் 2017-18 நிதியாண்டில் வங்கிகளுக்கு வந்த புகார்விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மொத்தம் வந்த புகார்களில் டிஜிட்டல் மற்றும் கார்டு பரிவர்த்தனைகள் தொடர்பான புகார்கள் 28 சதவீதம். வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் நடந்து ெகாள்வதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக 22 சதவீத புகார்கள் பதிவாகியுள்ளன. ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் தொடர்பாக 15 சதவீத புகார்கள் வந்துள்ளன.

கார்டு பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் (7.2 சதவீதம்), ஆன்லைன் வங்கிச்சேவை புகார்கள் (5.2 சதவீதம்) உட்பட டிஜிட்டல் வங்கி சேவைகளின் ஒட்டு மொத்த புகார்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 சதவீதத்தை தொட்டுள்ளது. 8,500 புகார்கள் ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கிச்சேவை தொடர்பாகவும், டெபிட் கார்டு தொடர்பாக 24,000 புகார்களும், கிரெடிட் கார்டுகள் தொடர்பாக 12,000 புகார்களும் வந்துள்ளன. 2016-17 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான புகார்கள் அதிகம்.. அதாவது, 2016-17ல் இந்த புகார்கள் 12 சதவீதமாக இருந்தது.

தற்போது 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏடிஎம் கார்டு புகார்களில் 60 சதவீதம் ஏடிஎம்  இயந்திரம் தொடர்பானவை. கணக்கில் தொகை கழிக்கப்பட்டும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரெடிட்கார்டுகளை பொறுத்தவரை, தவறான பில் அனுப்பப்பட்டுள்ளது என பல வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Reserve Bank of India , CASH IN CASH ..., ACCOUNTING, RBI, 'Digital', Complaints
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...