×

விற்கப்படும் குழந்தைகளுக்கு முறைகேடாக பிறப்பு சான்றிதழ் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் முறைகேடு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளங் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. முப்பது ஆண்டுகளாக நடந்துள்ள குழந்தை வியாபாரம் எப்படி வெளிஉலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது, குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து எப்படி இவர்களால் பெற முடிந்தது, குழந்தை திருட்டும் இதில்  சம்பந்தப்பட்டுள்ளதா என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இப்படி விற்கப்படும் குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சி அலுவலகம் மூலம் முறைகேடாக பிறப்புச் சான்றிதழும் வாங்கிக் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளது. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலும் -  முறைகேடுகளும் பெருக்கெடுத்து ஓடுவதை நிரூபிக்கிறது. இச்சம்பவம்  குறித்து காவல்துறையினருக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே, குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து தீர விசாரிக்க வேண்டும். இவர் நர்சாக பணியாற்றிய காலத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், இந்த விற்பனையில் வேறு  ஏதேனும் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோத கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், இதற்கு உடந்தையாக இருந்தவர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவர்  மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விற்பனை செய்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள  வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,K.Balakrishnan , Birth certificate, children, AIADMK regime,K.Balakrishnan
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி