×

சத்துணவு முட்டைக்கான டெண்டர் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு: ஜூன் 6ம் தேதி முடிவெடுப்பதாக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான  சத்துணவு  முட்டை கொள்முதலுக்கான டெண்டர் காலம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.  மாநில அளவில் டெண்டர் கோரப்பட்ட கொள்கையை மாற்றி, மண்டல அளவில் டெண்டர் கோருவது என்று 2018 ஆகஸ்ட் 20ல் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. . ஒரு லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யும் திறனும், டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள முட்டைகளில் 60 சதவீதம் சப்ளை செய்யும் தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று தமிழக அரசு   நிபந்தனை விதித்தது.

 இதை எதிர்த்து கோழி பண்ணைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆர்.மகாதேவன், சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரையும்,  அரசாணையையும் ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
 இந்த உத்தரவை எதிர்த்து தமிழக சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழுந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், இடைத்தரகர்களை ஒழித்து விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.  

டெண்டர் விஷயத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. எனவே, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதேபோல், கோழிப்பண்ணை நிறுவனங்கள் சார்பிலும் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒப்பந்த காலம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து முட்டை கொள்முதல் செய்வது சட்டவிரோதமானது. சத்துணவு முட்டை கொள்முதலை அரசே ஏன் மேற்கொள்ளக்கூடாது?.  மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தற்போது முட்டைகள் சப்ளை செய்து வரும்  நிறுவனங்களிடம் இருந்தே முட்டைகள் கொள்முதல் செய்வதா, வேண்டாமா என்பது குறித்தும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை கோரிய மனு குறித்தும் முடிவெடுக்க வழக்கின் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu , Nutritional egg, tender, iron
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...