×

தமிழகத்தில் புயல் கரையை கடந்தால் தண்ணீர் பஞ்சம் தீரும்,.. ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும்,.. தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: தமிழகத்தில் புயல் கரையை கடந்தால் தண்ணீர் பஞ்சம் தீரும் ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். தற்போது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று  தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் சின்னம் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளது. இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் அல்லது நடுக்கடலில் பலமிழக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது: புயல் எங்கு கரையை கடக்கிறதோ அதன் சுற்று பகுதிகளில்  மிக கனமழை பெய்யும். மேலும் வறட்சி மறைந்து வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. புயல் துல்லியமாக தமிழகம் அருகே தான் கரையை கடக்கும் என்பதை கணிக்க இன்னும் ஒரு நாள் தேவைப்படும். 60 % தமிழகத்தில் புயல் கரையை கடக்கும்  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். புயல் சென்னை அருகே கரையை கடந்தால் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் தண்ணீர் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் அதே சமயம் சேதாரமும் அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,state ,Tamil Nadu ,Weatherman , Tamil Nadu, Storm, Water Famine, Damage, Tamil Nadu Weatherman
× RELATED கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில...