×

மே 23ம் தேதி காலை 6 மணி வரை தபால் ஓட்டுபோட அனுமதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு ஆர்எஸ் பாரதி கடிதம்

சென்னை: மே 23ம் தேதி காலை 6 மணி வரை தேர்தல் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்ததில் கூறியுள்ளதாவது: தபால் ஓட்டுகளை பதிவு செய்வதில் தேர்தல் கமிஷனின் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்ைல. பல தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கான, தபால் வாக்கு பெட்டி வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள், சில ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் துறை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் ேதர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் முறையாகவும், விதிகளின்படியும் தங்களின் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்படவில்லை.அதே போல் தபால் ஓட்டு செலுத்துவதற்கு, வாக்குசீட்டுடன் படிவம் -3 இணைத்து வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் வாக்குகளை பதிவு செய்வதற்காக, வாக்குசாவடிகளில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு வாக்குசீட்டுடன் படிவம்-3 இணைத்து வழங்கப்படவில்லை. அதனால் மே 23ம் தேதி காலை 6 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் தபால் ஓட்டுக்களை பெறுவதற்கான வாக்குபெட்டிகளை வைக்க வேண்டும். தபால் வாக்கு பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,Bharathi , Postal Drive, Election Commission, RS Bharathi letter
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...