×

தர்மபுரியில் 10 பூத்தை கைப்பற்றி பாமகவினர் கள்ள ஓட்டு போட்டனர்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை: தர்மபுரி தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளை பாமகவினர் கைப்பற்றியதாக ஆதாரத்துடன் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில்  கூறப்பட்டு இருப்பதாவது:பாமக. சார்பில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, நாம் மட்டும்தான் வாக்குச்சாவடிகளில் இருப்போம், புரிகிறதா என்று  பேசினார். இதுபற்றி கடந்த 5ம் தேதியன்று ஏற்கனவே புகார் கொடுத்தோம்.வாக்குச்சாவடிகளை அவர்கள் கைப்பற்றிவிட வாய்ப்புள்ளதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டாலும், 18ம் தேதிவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் வாக்குப்பதிவு அன்று, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கடத்தூர், மொட்டன்குறிச்சி, நத்தமேடு உள்பட பல இடங்களில் உள்ள 10  வாக்குச்சாவடிகளில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.ஒரு நபர் பல வாக்குகளை அங்கிருந்த அதிகாரியின் உதவியுடன் பதிவு செய்தார். பாமகவினர் அல்லாதோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. சி.சி.டி.வி. மூலம் அங்கு நடந்த  வாக்குப்பதிவை பதிவு செய்யவில்லை. அங்கு நியாயமாக தேர்தல் நடக்கவில்லை என்பதால் தகுந்த பாதுகாப்புடன் அவற்றில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அப்போது ஒரே நபர் பல ஓட்டுக்கள் போடுவதுபோல போட்டோக்களையும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhammapuri ,Dharmapuri , Dhammapuri, grabbed ,10 flowers , Dharmapuri
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்