×

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் குடியிருப்பில் புகுந்த தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 25 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி ஜெயங்கொண்டத்தில் போராட்டம் நடைபெற்றது.  

பொன்பரப்பியில் குடியிருப்பில் புகுந்த தாக்குதல்

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தின் அருகே ஜெயங்கொண்டம் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின்  தேர்தல் சின்னமான பானையை பாமகவை சேர்ந்த சிலர் உடைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து அவ்வழியாக வந்த பாமகவை சேர்ந்த சுப்ரமணியன் உள்பட 4 பேர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சுப்ரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாமக தரப்பு அருகே உள்ள காலனி தெருவில் புகுந்து 20க்கும் மேற்பட்ட  வீடுகளின் ஓடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரை அடித்து மண்டையை உடைத்துள்ளனர். அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொன்பரப்பியில் சிலரது இரு சக்கரவாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு

இந்த விவகாரத்தால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு, அந்த தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க 150கும் மேற்பட்ட போலீசார் 13 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின் காரணமாக 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டத்தில் போராட்டம்

எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாக உள்ளதால் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொன்பரப்பியில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி ஜெயங்கொண்டத்தில் போராட்டம் நடைபெற்றது.  இதனிடையே அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fight ,attackers ,town ,Ariyalur district , Ariyalur, ponnaprabi, attack, police, case, fight, conflict, violence
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...