×

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்தனர் மக்கள் சிறப்பு பஸ்கள் இல்லாததால் போராட்டம்: தடியடி நடத்தி கலைத்தனர் போலீசார்

சென்னை: ஓட்டுப்போட சொந்த ஊருக்கு புறப்பட்ட பயணிகள் கோயம்பேட்டில் நேற்று நள்ளிரவில் ராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இன்று தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்போட சொந்த ஊர் செல்ல நேற்று இரவு பலர் பஸ்களில் பயணித்தனர். சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக நேற்று இரவும 1,500 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  நேற்று இரவு சென்னையில் இருந்து செல்வதற்கு மட்டும் 19 ஆயிரம் பேரும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு 11 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் முன்பதிவு செய்யாமல் ஏராளமானோர் பஸ்களில் பயணம் செய்த கோயம்பேடு வந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 நள்ளிரவில் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. அப்போது போதிய பஸ் வசதி செய்து தரப்பப்படாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒருகட்டத்தில் திடீரென அவர்கள் போராட்டத்தில் இறங்கி பஸ்களை மறித்தனர். இதனால் போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் திடீரென தடியடி நடத்தினர். போலீசார் ஓட, ஓட விரட்டி பயணிகளை அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தடியடில் 5க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.அதன்பின் ஆத்திரம் அடைந்த  பயணிகள் கோயம்பேட்டில் இருந்த பூந்தமல்லி புறப்பட்ட மாநகர பஸ் டிரைவரை தாக்கினர். இதில் அவரது கை முறிந்தது.

தோல்வி பயத்தால் சதியா?
சிறப்பு பஸ்கள் இயக்கப்படாதது குறித்து பயணிகள் கூறுகையில், ‘‘ஓட்டுப் போட செல்வதற்காகத்தான் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தோம். ஒரு ஓட்டுக்கூட கிடைக்காது என்ற பயத்தால் அதிமுகவும், பா.ஜ.வும் இணைந்து சிறப்பு பஸ்கள் விடாமல் சதி செய்துள்ளது’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hometown , People flocked ,Koyambed , hometown ,lack ,special buses,Struggle
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் அதிமுகவில்...