போலீஸ் வந்தால் தகவல் சொல்ல ஊர் முனையில் ஒரு ஆளை நிறுத்து ‘ஒரு ஓட்டுக்கு கண்டிப்பா 500 கொடுக்கணும்.... அதிமுக மாஜி எம்எல்ஏவின் பரபரப்பு வீடியோ

சென்னை: வேலூர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 கட்டாயம் கொடுக்க வேண்டும்’ என்று கூட்டணி கட்சியினருக்கு வாணியம்பாடி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் திட்டம் வகுத்து கொடுக்கும்  வீடியோ வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், 38 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு பதிவு இன்று நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தங்களது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.  ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதை தேர்தல் ஆணையமும் மற்றும்  தேர்தல் பறக்கும் படையினரும் கண்டுகொள்ளாமல் பணம் பட்டுவாடாவுக்கு துணையாக நிற்பதாக பரவலாக காணப்படுகிறது.இதற்கிடையே, வேலூர் தொகுதியில் வாணியம்பாடி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் வாக்காளர்களுக்கு எப்படி பணம் வழங்குவது என்பது குறித்து கூட்டணி கட்சியினருக்கு மரத்தடியில் நின்று திட்டம் வகுத்து  கொடுக்கும் வீடியோ காட்சி வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் பேசியதாவது:முன்னாள் எம்எல்ஏ: எல்லோரும் வந்த பிறகு தான் கொடுக்க வேண்டும். உங்கள் சவுகிரியத்துக்கு ஒரு ஓட்டுக்கு கூட பணம் கொடுக்க கூடாது. ஒன்று, நீ பாமக தானே...... இல்லையா... தேமுதிகவா நீங்கள் 2 பேர் வர்ரீங்களா...  அல்லது மூன்று பேர் வர்ரீங்களா.... பாமக யாரு... 4 பேரு இருக்கிறீங்களா..... பாலு.. அப்புறம்...பாமக தொண்டர்: நான் என்று கூறுகிறார்.முன்னாள் எம்எல்ஏ: உன்னை வைத்து பணம் கொடுக்க முடியாது....

பாமக தொண்டர்: சொல்றத கேளு..... எனக்கு பல கோடி சொத்து இருக்கு......முன்னாள் எம்எல்ஏ: அதிமுகவில் 3 பேர் வரட்டும். ஒரே டீமா போங்க... 2 டீமா போவாதீங்க இல்ல 10 பேரு கூட போங்க... ஒரு ஆளை ஊருக்கு முன்னால நிற்க சொல்லுங்க.... யாராவது ஆளு வந்தாலும், போலீஸ் வராங்க  வண்டி வருதுனு செல்போனில் தகவல் சொல்றதுக்கு நிற்க வையுங்கபா... நீங்கள் ஒரே டீமாக 10 பேர் போய்..... அதில் பாமக 3 பேர் அதிமுக 3 பேர் ஏசிஎஸ் டீம் 2 பேர் போங்க... ஏசிஎஸ் ஆட்கள் யாரும் இல்லாத போது துட்டு  கொடுக்கக் கூடாது. அதே மாதிரி காசை ஒரே இடத்தில் வைக்காதீங்க.... நீங்கள் பணத்தை எண்ண வேண்டுமானால் அப்படி ஓரமாக போய் எண்ணுங்க... எங்க ஆட்களை நான் அனுப்புறேன். நீங்கள் எப்ப பணம் கொடுக்கிறீங்கனு  சொல்லுங்க நான் அப்ப ஆட்கள் அனுப்புறேன்.

கூட்டணி கட்சியினர்: அண்ணா பக்காவா நைட்டுல கொடுக்கலாம் அண்ணா...

முன்னாள் எம்எல்ஏ: ஒரு ஓட்டுக்கு ரூ.500 கொடுக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே பெயர்களை டிக் பண்ணி கொடுத்து இருக்கிறோம்.கூட்டணி கட்சியினர்: மெல்ல பேசு அவரு பேனில் பேசுறாறு.....முன்னாள் எம்எல்ஏ: சொன்ன கேட்க மாட்றாங்கப்பா..... எங்க ஊருக்காரன் ஒருத்தன் மாட்டிக்கினான்.... எல்லா டிவியிலும் பிளாஸ் நீயூஸ் போகுது......தயவு செய்து இதுபோல ஆளை கூட அழைத்து செல்லாதீங்க, சிக்கல்ல  மாட்டிக்கிவீங்கப்பா...பாமக தொண்டர்: நானும் போவேன்.....முன்னாள் எம்எல்ஏ: கம்முனு இரு.... உள்ளே பிடித்து போட சொல்லுவேன்.... ஆமாம்.பாமக தொண்டர்: நீ முன்னாள் எம்எல்ஏ தானே உள்ளே பிடித்து போட சொல்லு..... 2,500க்கு அடிமையா பாமக.... சொல்லு.... என்னடா இது கூட்டணி....முன்னாள் எம்எல்ஏ: பணத்தை பத்திரமாக எடுத்து வையுங்கப்பா.......இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>