×

எனக்கு ஓட்டு போடலன்னா சாபம் உட்ருவேன்

உ.பி.யில் போட்டியிடும் பாஜ எம்பி சாக்‌ஷி மகாராஜ், உன்னோ மக்களவைத் தொகுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய போது, ``எனக்கு வாக்களிக்காவிட்டால், சாபம் விடுவேன். நான் ஒரு துறவி. இந்து மத சாஸ்திரப்படி,  துறவி ஒன்றை கேட்டு அதை அவருக்கு தரவில்லை என்றால், நல்லவற்றை எடுத்து கொண்டு தனது பாவங்களை திருப்பி தருவார் என்று கூறப்படுவது உண்டு. நான் வாக்காளர்களாகிய உங்களிடம் சொத்துகளை கேட்கவில்லை.  125 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வாக்குகளைத்தான் கேட்கிறேன். எனக்கு வாக்களியுங்கள். இல்லையென்றால் சாபமிடுவேன்’’ என்று மிரட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் எதிர்ப்பை  பெற்றுள்ளது. இவர் ஏற்கனவே தனக்கு சீட் தராவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கட்சித் தலைமையை மிரட்டி, தொகுதியை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : not ,vote, I would,curse
× RELATED முல்லை பெரியாறில் அணை கட்டும் கேரள...