×

அதிமுகவின் அதிகார பூர்வ தலைவர்கள் மோடி, அமித்ஷா: கே.பாலகிருஷ்ணன் கிண்டல்

திருவில்லிபுத்தூர்: தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து, திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில், மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ தலைவர்கள் மோடி, அமித்ஷா தான். பதவிக்காக எதையும் செய்வார்கள் ஓபிஎஸ், இபிஎஸ். ராஜதந்திரத்தால் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி. நாங்கள் எந்த  மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. 100 நாள் வேலை திட்டத்தை அழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. தமிழை தேசிய மொழியாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் மீது பற்று இருப்பது போல் மோடி நடிக்கிறார்  என்றார்.  பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். முக்கியமாக, தோல்வி பயத்தால் தான் எதிர்க்கட்சிகளை ரெய்டு மூலம் பாஜ மிரட்டுகிறது. மோடி, எடப்பாடி மீது  மக்கள் கோபத்தில் உள்ளனர்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amit Shah: K.Balakrishnan Kundal , AIADMK, Modi, Amit Shah, K.Balakrishnan, Kundal
× RELATED உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட தேர்தல்...