×

தவானின் அதிரடி ஆட்டத்தால் நைட் ரைடர்சை வீழ்த்தியது கேப்பிடல்ஸ்

கொல்கத்தா: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழத்தியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் சந்தீப் லாமிகேனுக்கு பதிலாக கீமோ பால் சேர்க்கப்பட்டார். கொல்கத்தா அணியில் பெர்குசன், ஜோ டென்லி, கார்லோஸ் பிராத்வெய்ட் இடம் பெற்றனர். கேகேஆர் தொடக்க வீரர்களாக டென்லி, ஷுப்மான் கில் களமிறங்கினர். இஷாந்த் வீசிய முதல் பந்திலேயே டென்லி கிளீன் போல்டாகி ஏமாற்றத்துடன் வெளியேறினார். அடுத்து கில்லுடன் உத்தப்பா இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது. உத்தப்பா 28 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த ராணா 11 ரன் எடுத்து மோரிஸ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடி அரை சதம் அடித்த கில், 65 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கீமோ பால் பந்துவீச்சில் அக்சர் பட்டேலிடம் பிடிபட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.  கடைசி கட்டத்தில் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல் வழக்கம்போல சிக்சர்களாகப் பறக்கவிட, கொல்கத்தா ஸ்கோர் எகிறியது. அவர் 45 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி மோரிஸ் பந்துவீச்சில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பிராத்வெய்ட் 6 ரன்னில் வெளியேறம் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. சாவ்லா 14 ரன், குல்தீப் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இதைத் தொடர்ந்து, 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.  தவான், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொட க்கம் முதலே தவான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரித்வி ஷா 14 ரன்னிலும், ஷ்ரேயாஸ் 6 ரன்னிலும், ரிஷப் பண்ட் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் தவானி்ன் ஆட்டத்தில் அனல் பறந்தது. முடிவில் 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Capitols , Dhawan, Kolkata, Delhi
× RELATED ஐபிஎல் டி20: பெங்களூரு அணியை 16 ரன்கள்...