×

கொஞ்சம் அடக்கி வாசிச்சா நல்லது!...பாஜவுக்கு சிவசேனா அட்வைஸ்

ரபேல் வழக்கில் முறைகேடு எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு கூறியதும், ஒரு வழியாக இந்த வழக்கு முடிவுக்கு வந்து விட்டதாகவே பலரும் நினைத்தனர். ஆனால், எதிர்பாராத திருப்பமாக  மத்திய அரசுக்கு எதிராக கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ரபேல் பற்றி வாய் திறக்க வேண்டாம் என பாஜ.வுக்கு அட்வைஸ் செய்துள்ளது சிவசேனா. ‘ரபேல் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து தேவையற்ற அறிக்கை, விவாதங்களை பாஜ வெளியிட்டால், இந்த கட்சிக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். பதிலடி  கொடுக்கிறேன் பேர்வழி என்று எதையாவது பேசி சிக்கலை ஏற்படுத்தாமல், மவுனச்சாமியாக இருப்பதுதான் சிறந்தது. கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபற்றி பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்.  இதுபோல், நமோ டிவி தடை பற்றியும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பல டிவி சேனல்கள் பிரதமரின் பேச்சுக்களை ஒளிபரப்பி வருகின்றன.  பாஜ தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்து வெளியான  வீடியோவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இது தேர்தல் பிரசாரத்தில் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விட்டது. இதில் பாஜ தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இதுபோன்ற மோதல், கலவரங்களை  நியாயப்படுத்தக் கூடாது’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shiv Sena , good, read , little, Shiv Sena,Bhaj
× RELATED மக்களவை தேர்தல் நேர்மையாக...