×

தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்!

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய நெல்லை முபாரக், சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய கே. அண்ணாமலை, முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய டி. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள். நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

The post தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்! appeared first on Dinakaran.

Tags : Daveka Chairman ,Vijay ,Chennai ,President ,Tamil Nadu Victory Club ,Congress ,Selvapperundagai ,Puducherry ,State ,Chief Minister ,Rangasamy ,Nataka ,Coordinator ,Seaman ,People's Justice Maiyam Party ,Kamal Hassan ,Daveka Chairman Vijay ,
× RELATED சென்னையில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் கொலை