×

மக்களவை தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் 40 தொகுதிகளை மட்டும் பாஜ வென்றிருக்கும்: ஆதித்ய தாக்கரே பேட்டி

மும்பை: உத்தவ் சிவசேனா கட்சி இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே மும்பையில் கூறும்போது,‘‘ வடமேற்கு மும்பை தொகுதி தேர்தல் முடிவு ஒரு மோசடியாகும். இந்த தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைக்கர், எங்கள் சிவசேனா(உத்தவ் பாலசாகிப் தாக்கரே) வேட்பாளர் அமோல் கீர்த்திகரை 48 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். எங்கள் வெற்றி அரசு இயந்திரம் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு மும்பை தொகுதியின் வாக்குகள் கோரேகானில் உள்ள மையத்தில் எண்ணப்பட்டது. அந்த மையத்தில் சட்டவிரோதமாக செல்போனுடன் நடமாடிய ரவீந்திர வைக்கரின் மைத்துனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் பாஜ 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது.வெறும் 40 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்’’ என்றார்.

The post மக்களவை தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் 40 தொகுதிகளை மட்டும் பாஜ வென்றிருக்கும்: ஆதித்ய தாக்கரே பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Lok Sabha ,Aditya Thackeray ,Mumbai ,Uddhav Shiv Sena ,North West Mumbai ,Shiv Sena ,Ravindra Vaikar ,Eknath Shinde ,Uddhav Balasakib Thackeray ,
× RELATED மீண்டும் மக்களவை சபாநாயகராக ஓம்...