×

8 வழிச்சாலையை ரத்து செய்ய முதல்வர் ஒப்புதல்: அன்புமணி வரவேற்பு

சென்னை: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச்சாலையை ரத்து செய்ய முதல்வர் அளித்துள்ள ஒப்புதலுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:    சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும். அது தமிழக அரசின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.  5 மாவட்ட விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தேன். அந்த வழக்கில்தான் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு முழுமையான தடை விதிப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் எனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரி கேவியட் மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் எனது சார்பில் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கின்றனர். இத்தகைய சூழலில்தான் முதலமைச்சர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பாமகவிற்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். இதற்காக முதல்வர் பழனிசாமிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,reception ,Dhamma , 8 SniperSpy, Principal, DMC
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...