×

செங்கோட்டை அருகே மேக்கரை வனப்பகுதியில் காட்டுத் தீ : வனவிலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம்

செங்கோட்டை:  செங்கோட்டை அருகே மேக்கரை வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிவதால் வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் நிலவுகிறது. தமிழக கேரளா எல்லையிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய  மேக்கரை தேரிக்காடு வனப்பகுதியில் நேற்று நண்பகல் 2 மணிமுதல் திடீரென காட்டுத் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இந்த தீயால் தேக்குமரங்கள், அரியவகை செடி, கொடிகள் தீ பிடித்து எரிகின்றன. தற்போது இந்த பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பற்றிய தீ தொடர்ந்து எரிகிறது. மாலையில் அரை மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தும் தீ அணையவில்லை.

காற்றின் வேகத்தில் காட்டு தீ மளமளவென பரவி சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் எரிந்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீயினால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மலையடிவார கிராமங்களுக்குள் புகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக காட்டு தீயை அணைக்கவும், மற்ற பகுதிகளுக்கும் தீ பரவுவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென இந்தப் பகுதி விவசாயிகள்  கோரிக்கை விடுத்து உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Forest fire ,forest ,Makar ,Red Fort , senkottai, Meaker, Forest Fire
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...