×

100 நாள் திட்டத்தில் வேலை செய்தபோது மண் சரிவில் சிக்கி 11 தொழிலாளர்கள் பலி: தெலங்கானாவில் பரிதாபம்

திருமலை: தெலங்கானாவில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தபோது மண் சரிவில் சிக்கி 11 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம், மரிக்கல் மண்டலம், திலேர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் மண் தோண்டியபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனே மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த பலரை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் 4 பேர் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் மேல்சிகிச்சைக்காக மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் அதே பகுதியை சேர்ந்த அனுராதா, பேமா, பவுத்தம்மா, லட்சுமி, கே.லட்சுமி, முங்கம்மா, ஆனந்தம்மா, கேசம்மா, பி.அனந்தம்மா உட்பட 11 பேர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மரிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pleasant ,Telangana , 11 workers killed , land mills , Telangana
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...