×

சிறந்த நடைமுறை; ஜெட்லி வரவேற்பு

புதுடெல்லி: ரபேல் வழக்கில் திருடப்பட்டதாக கூறப்படும் ஆவணங்களை  ஆதாரமாக உச்ச நீதிமன்றம் ஏற்றது சிறந்த நடைமுறை என ஜெட்லி கூறியுள்ளார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ரபேல் தொடர்பாக சிஏஜி ஏற்கனவே விளக்கி விட்டது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், ரபேல் வழக்கில் திருடப்பட்ட ஆவணங்களையும் ஆதாரமாக கருதி மறுவிசாரணைக்கு ஏற்றுள்ளது சிறந்த நடைமுறை,’ என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jetley , Jetley
× RELATED முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா –...