×

அயோத்தியில் 67 ஏக்கரை ஒப்படைக்க எதிர்ப்பு

புதுடெல்லி: அயோத்தி ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நில வழக்கை கடந்த 2010ம் ஆண்டு விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகமாக பிரித்து வழக்கில் தொடர்புள்ள நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம், ராம் லாலா அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிலத்ைத சுற்றியுள்ள பலரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 67.3 ஏக்கர் பிரச்னை இல்லாத நிலத்தை, உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதை எதிர்த்து நிர்மோகி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், `இந்த இடத்தை ஒரு பிரிவினருக்கு திரும்ப ஒப்படைத்தால் அதில் உள்ள பல கோயில்கள் மற்றும் அவற்றின் உரிமை பாதிக்கப்படும் என்பதால் திரும்ப ஒப்படைக்கக் கூடாது’  என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land ,Ayodhya , Ayodhya, LAND,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!