×

சென்னை சேலையூர் தொழிலதிபர் பழனிசாமி கொலை வழக்கு : தேடப்பட்ட குற்றவாளி சாமியார் ரஞ்ஜித் குமார் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை சேலையூர் அருகே தொழிலதிபர் பழனிசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சாமியார் ரஞ்ஜித் குமார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். ரஞ்சித்குமார் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து, சோமசுந்தரம் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் சாமியாரும் சரணடைந்துள்ளான். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இரு குற்றவாளிகளான முருகானந்தம், அறிவு ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த சேலையூர், அகரம்தென், அன்னை சத்யா நகரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததாக கடந்த 29-ம் தேதி சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த சொகுசு காரில் ஆண் சடலம் ஒன்று இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்த நபர் கீழ்கட்டளை, அருள்முருகன் நகர் விரிவு, நான்காவது தெருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன அதிபர் பழனிசாமி (42) என்பது தெரியவந்தது. இதற்கிடையில், பழனிசாமியை கொலை செய்ததாக சேலையூர், கஸ்பாபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம் (27) மற்றும் மாரிமுத்து (38) ஆகிய இருவரும் சைதாப்பேட்டை 18வது  நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில், சரணடைந்த இருவரும் பழனிசாமியிடம்  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.5 லட்சத்தை கடனாக பெற்று இருந்ததாகவும், அந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக பழனிசாமி சேலையூர் அருகே வந்து  இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த இருவரும் பழனிசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த  கொலையில் வேறு சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தேடப்பட்ட வந்த சாமியார் ரஞ்சித் குமார் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியானது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ரஞ்ஜித் குமார் என்ற திருநங்கை சாமியார், பில்லி, சூனியம் என்ற பெயரில் பலரை அச்சுறுத்தி நில அபகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.மப்பேட்டில் உள்ள ரஞ்ஜித் குமார் வீட்டில் நள்ளிரவு அமானுஷ்ய பூஜை, பரிகாரம் உள்ளிட்டவை செய்திருப்பதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பூஜைக்குப் பலி  கொடுப்பதற்கென ஏராளமான ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பழனிசாமி, தனது தொழிலில் முன்னேற்றமடைய பல்வேறு ஆன்மீக  வழிபாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் தொழிலதிபர் பழனிசாமியை சாமியார் ரஞ்ஜித் குமார் தனது ஆன்மீக அடிமையாகவே மாற்றியதாக உறவினர்கள் புகார்  கூறியுள்ளனர்.

பணம் படைத்த பழனிசாமியை பயன்படுத்தி தனது ஜெய சக்தி ஆன்மீக பீடத்தை பெரிய அளவில் விரிவாக்க எண்ணிய ரஞ்ஜித் குமார், அவரை பல வகைகளில் ஏமாற்றி,  பயமுறுத்தி லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளான். ஒரு கட்டத்தில் ரஞ்ஜித் குமாரின் போலி முகம் தெரியவரவே ஆத்திரத்தில் தாம் கொடுத்த பணத்தை கேட்டு  பழனிசாமி வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த 29-ம் தேதி பணத்தை வாங்கி வரச் செல்வதாகவே மனைவியிடம் கூறிச் சென்ற தொழிலதிபர் பழனிசாமி கொலை  செய்யப்பட்டார். இந்நிலையில் சோமசுந்தரம், மாரிமுத்து ஆகியோரை ஏப்ரல் 8ம் தேதி வரை போலீஸ் விசாரிக்க தாம்பரம் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,Salman ,Sunni ,Ranjit Kumar , Businessman Palanisamy, murder, sammari Ranjith Kumar
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்