நீர்மட்டம் சரிவு எதிரொலி : மேட்டூர் அணையில் நீர்திறப்பு 5000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு எதிரொலியாக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 100 அடிக்கும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் நீர்மட்டம் மள மளவென சரிந்து வந்தது. கடந்த மாதம் 31ம் தேதி நீர்திறப்பானது விநாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்ட போது, 63.82 அடியாக இருந்த நீர்மட்டம் மறுநாள் ஏப்ரல் 1ம் தேதி 62.04 அடியானது.

அன்றைய தினம் நீர்திறப்பு விநாடிக்கு 6,000 கனடியாக குறைக்கப்பட்டபோதிலும், நீர்வரத்து சரிவால் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு அடி வீதம் நீர்மட்டம் குறைந்து வந்தது. கடந்த 5ம் தேதி 59.92 அடியான நீர்மட்டம், நேற்று முன்தினம் 6ம் தேதி 59.20 அடியானது. இந்நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்பட்ட 6,000 கனஅடி தண்ணீர், நேற்று காலை முதல் 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அப்போது, அணையின் நீர்மட்டம் 58.47 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு 23.56 டி.எம்.சியாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நீர்பிடிப்பு பகுதிகளில் மழை...