×

பண்ருட்டி அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக நரசிம்மர் சிலை பறிமுதல் : அதிகாரிகள் தீவிர விசாரணை!

கடலூர் : பண்ருட்டி அருகே பறக்கும் படை வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோகத்தால் ஆன நரசிம்மர் சிலை சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வரும் 11ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணம், நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பண்ருட்டி அருகே பஞ்சலோக நரசிம்மர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்த  சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பஞ்சலோகத்தாலான நரசிம்மர் சிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனனர். இதுகுறித்து காரில் வந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட சிலையை பறிமுதல் செய்து பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை சென்னையிலிருந்து கடத்தப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டரை அடி உயரம், 70 கிலோ எடையில் மிக அற்புதமான கலை அம்சத்துடன் கூடிய இந்த நரசிம்மர் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Panchkula Narasimha ,Panruti , Cuddalore, Panchaloka Narasimha Statue, Election Fly Officers
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை