×

திருப்புத்தூர் அருகே களைகட்டிய வடமாடு மஞ்சுவிரட்டு

திருப்புத்தூர்:  திருப்புத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டி கருப்பர் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காலை 10 மணியளவில் தொடங்கிய வடமாடு மஞ்சுவிரட்டில் 12 மாடுகளும், 12 மாடுபிடி வீரர்கள் அடங்கிய குழுக்களும் பங்கேற்றன.

மதுரை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகளும், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்கினர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும், காளையர்களுக்கும் கட்டில், பீரோ, குத்துவிளக்கு, சைக்கிள், கிரைண்டர், மிக்ஸி போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஊர்குளத்தான்பட்டி கிராமத்தார், இளைஞர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இளைஞர்கள் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalaigatti Northmodu Manjuvit ,Tiruputhur , Tirupputtur, vatamatu, mancuvirattu
× RELATED திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு