×

சுலோவாகியா நாட்டில் முதல் முறையாக ஜூஜூனா என்ற பெண் அதிபராக தேர்வு: 58% வாக்குகள் பெற்றார்

பிராட்டிஷ்லாவா: சுலோவாகியா நாட்டில் முதல் முறையாக பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜன் குசியாக் என்ற பத்திரிகையாளர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்லோவேக்கியாவின் அரசியல்வாதிகளுக்கும்,  திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கருதப்படும் குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து ஆய்வு நடத்தியபோது தன்னுடைய வருங்கால மனைவியுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்லோவேக்கியாவில் புலனாய்வு  பத்திரிகையாளர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஸ்லோவேக்கியாவின் பிரதமர் பதவியிலிருந்து பிக்கோ விலகினார். இதனையடுத்து அதிபர் தேர்தல் நடைபெற்றது.

எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜூஜூனா கபுடோவா என்ற பெண் ஊழலுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார்.  இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டன. முதலாவது சுற்று வாக்குப் பதிவின்போது ஜூசானா 40 சதவீத வாக்குகளையும், செஃபோகோவிக்  19 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தார். இந்நிலையில் ஜூஜூனா கபுடோவா 58 சதவீத ஓட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் வேட்பாளர் மாரோஸ் செப்கோவிக்கிற்கு 42 சதவீத ஓட்டுகள் விழுந்தன.  சுலோவாகியா நாட்டில் பெண் ஒருவர் அதிபராக தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் என்று அவர் கூறியிருந்தார்.  மேலும் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுத்ததற்கு குசியாக்கின் மரணம் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்திருந்தார்.

யார் இந்த ஜூஜூனா:

சட்டவிரோதமாக நிலத்தில் குப்பைகளை குவித்தது தொடர்பாக ஸ்லோவேக்கியாவில் 14 ஆண்டுகள் நடந்த வழக்கை முன்னின்று எடுத்து சென்றதன் மூலம் நாடுமுழுவதும் சிறந்த வழக்கறிஞராக ஜூஜூனா அறியப்பட்டார். ஸ்லோவேக்கியாவின் நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினரை கூட கொண்டிராத தாராளவாத முற்போக்கு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள 45 வயதான ஜுசானா விவகாரத்து ஆனவர். ஜுசானா இரண்டு  குழந்தைகளுக்கு தாயாவார். இதுவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணமும், குழந்தைகளை தத்தெடுப்பதும் சட்டவிரோதமாக உள்ள இந்நாட்டில், அதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை ஜூசானா கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge ,president ,Republic of Slovenia , For the first time in the Republic of Slovenia, Judge chooses the female president: 58%
× RELATED யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில்...