×

காங்கிரசுக்கு சவால் விடும் பிஜேடி வேட்பாளர் பேரு பத்ரி நாராயண்... தொகுதி காசிபுரா...: தைரியமிருந்தா ஒத்தைக்கு ஒத்தை ரெடியா?

ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகள், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. ஒடிசாவை பொறுத்தவரை விஐபி தொகுதியாக காசிபுரா சட்டமன்ற தொகுதி உள்ளது. இங்கு பிஜூ ஜனதா தள வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏவும், சீனியர் அமைச்சருமான பத்ரி நாராயண் பாத்ரா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.  இவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக ஒடிசா காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசித்து வந்தனர். தற்போது அம்மாநில காங்கிரஸ் தலைவரான நிரஞ்சன் பட்நாயக்கை நிறுத்துவதற்கான முயற்சி நடந்து வருகிறது. அவரும் சவாலான இத்தொகுதியில் நின்று பத்ரிநாராயண் பாத்ராவை தோற்கடிப்பேன் என சவால் விடுகிறார்.  இந்த சவாலை பிஜூ ஜனதா தளம் ஏற்றுக்கொண்டுள்ளது.

‘‘யாரு வேணும்னாலும் நிற்கட்டும்… அதனாலென்ன… என் தொகுதியில நான் ஸ்டிராங். என் ரெக்கார்டை எடுத்து பாருங்க… எத்தனை நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன் தெரியுமா? நிரஞ்சன் பட்நாயக்கை காசிபுரா  தொகுதியில யாருக்கு தெரியும்? சவாலுக்கு நான் ரெடி’’ என்கிறார் பத்ரி நாராயண் பாத்ரா.‘‘நான் மட்டும் சளைச்சவனா… சவாலுக்கு நானும் ரெடி. அவர் என்னை விட வலுவான வேட்பாளர் தான். அவரை மாதிரி வன்முறை, குற்ற நடவடிக்கைகளில் என்னால் ஈடுபட முடியாது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை  விரும்பினால் காசிபுராவில் களமிறங்க தயார்… அதே நேரம் 2 தொகுதிகளில் நிற்கவும் விரும்புகிறேன்’’ என நிரஞ்சன் பட்நாயக் தன் தரப்பில் தம்ஸ் அப்பை உயர்த்தி உள்ளார்.நிரஞ்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பண்டரிபோக்ஹாரி தொகுதியையும் கேட்பதாக ஒடிசா காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். நீயா, நானா என நிலவும் போட்டியில் இருவரும் மாறி, மாறி எதிரெதிராக பேட்டியளித்துக்  கொண்டு ஒடிசா தேர்தல் களத்தை மேலும் சூடாக்கி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Beroo Badri Narayan ,BJD ,Congress , The BJD candidate, Beroo , Narayan,
× RELATED ஒடிசா முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரி...