×

16 கோடி சிக்கிய விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: ₹16 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறி க்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிக்கை: அதிமுக அமைச்சரின் நெருங்கிய கூட்டாளியும், கான்ட்ராக்டருமான சபேசன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ₹16 கோடி தேர்தலுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை  தேர்தல் அதிகாரி கூறினார் என்று செய்தி வெளிவந்துள்ளது.சென்னையில் வருமான வரித்துறையினரால் நங்கநல்லூர் பகுதியில் ஒரு கான்ட்ராக்டர் வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ₹16 கோடி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது என்று  தெரிவித்தது தவறுதலாக பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : censors ,Election Commission ,Chief Electoral Officer ,Tamil Nadu , 16 crore ,problem,,Election Commission, Tamil Nadu
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...