×

இன்று அமலுக்கு வருகிறது விஜயா, தேனா வங்கிகள் இனி பரோடா வங்கியாக செயல்படும்

புதுடெல்லி: விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை பாங்க் ஆப் பரோடாவுடன் இணைப்பு இன்று அமலுக்கு வருகிறது. பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் பிரச்னையை சீராக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கி ஆகியவற்றின் இணை ப்புக்கு பரிந்துரை  செய்யப்பட்டது. மேற்கண்ட 3 வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வங்கி இணைப்புகள் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு முடிக்கப்பட்டு விடும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கெனவே  தெரிவித்திருந்தார். அதன்படி இணைப்பு பணிகள் முடிந்து, விஜயா, தேனா வங்கிகள் இன்று முதல் பாங்க் ஆப் பரோடாவாக மாறுகின்றன.

  இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், விஜயா மற்றும் தேனா வங்கிகள் பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் மேற்கண்ட வங்கிகள் பாங்க் ஆப் பரோடாவாக  செயல்படும். எனவே விஜயா மற்றும் தேனா வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளராக பாவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijaya ,banks ,Tina ,Baroda Bank , force, Vijaya, Tina Banks ,longer, Baroda
× RELATED சென்னையில் நாளை விஜயா தாயன்பன் மகள் இறுதி சடங்கு