×

தமாகாவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை:  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெற்றுள்ளது. இதில், தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடராஜன் என்பவர் தமாகா சார்பில் போட்டியிடுகிறார். ஏற்கனவே தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கிரசில் இணைத்ததால் தமாகா கலைக்கப்பட்டது.  அதற்கு பிறகு, காங்கிரசில் இருந்து வெளியே வந்த தமாகா, கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும்படி தமாகாவின் மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 அப்போது, ‘நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும், அதுவும் இந்த தேர்தலுக்கு மட்டும்தான் என்று சில நிபந்தனைகளின் அடிப்படையில், நீதிமன்றம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது. ஆனால் இந்த தேர்தலில், தமாகாவோ ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறது. அதனால், சைக்கிள் சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போனது.  இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் 3 சின்னங்களை அனுப்பி, அதில் குறிப்பாக, ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தமாகா கோரியது.  அதை ஏற்று ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் நேற்று  ஒதுக்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Announcement ,Tamana ,Election Commission , tmc, Election Commission
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...