×

சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி ஹர்திக் படேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி : குஜராத் நீதிமன்றம் அதிரடி

அகமதாபாத் : தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி ஹர்திக் படேல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹர்திக் படேலின் மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹா்திக் படேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

கடந்த 2015ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் படேல் சமூகத்தினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோாிக்கையை முன்னிருத்தி பேரணி நடைபெற்றது. பேரணியின் போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா் ரிஷிகேஷ் படேலின் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பேரணி வன்முறையாக மாறியது.

இது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பேரணியை முன்னின்று நடத்திய பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹா்திக் படேல் உள்ளிட்ட 17 பேர் வழக்கில் சோ்க்கப்பட்டனா். விசாரணை இறுதியில் ஹா்திக் படேல் உள்ளிட்ட 3 போ் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் உயர்நீதிநீதி மன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
சமீபத்தில் ஹர்திக் பட்டேலுக்கு திருமணம் நடந்தது.  குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய குழு கூட்டத்துக்கு வந்த  ஹர்திக் பட்டேல், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மனு தள்ளுபடி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஸ்நகர் மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் உயர்நீதிநீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார்.அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.இதைதொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hartik Patel ,Gujarat High Court , Gujarat, High Court, Appeal, Harpic Patel, Manu, Discount
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...