×

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 மகள்களை மீட்க கோரிய மனு தள்ளுபடி: தந்தை தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் நித்தியானந்தா தற்போது கைலாசா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா தன் 4 மகள்களை பெங்களூருவில் இருந்த நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். அவர்கள் 4 பேரையும் ஷர்மாவின் அனுமதியின்றி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர். இதுகுறித்து குஜராத் காவல்துறையினரிடம் ஷர்மா புகார் கொடுத்தார். இதையடுத்து அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்து ஷர்மாவின் 2 மகள்கள் மீட்கப்பட்டனர். ஆனால் அவரது மூத்த மகள் லோபமுத்ர ஷர்மா(21), நந்திதா ஷர்மா(18) ஆகியோர் தந்தையுடன் செல்ல மறுத்து விட்டனர்.
அவர்கள் இருவரையும் மீட்டு ஒப்படைக்கும்படி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஷர்மாவும், அவரது மனைவியும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் கடந்த 24ம் தேதி ஷர்மாவின் இரண்டு மகள்களும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகினர். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏ.ஒய்.கோக்ஜே, ராஜேந்திர எம் சரின் ஆகியோர் அடங்கிய அமர்வு, ”லோகமுத்ரா ஷர்மா, நந்திதா ஷர்மா இருவரும் 24ம் தேதி ஆஜரானபோது நாங்கள் ஆசிரமத்தில் மகிழ்ச்சியாக உள்ளோம். தொடர்ந்து நித்தியானந்தாவின் வழிகாட்டுலில் ஆன்மீக பாதையை பின்பற்ற மனப்பூர்வமாக முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். எனவே ஜனார்த்தன ஷர்மாவின் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என்று தெரிவித்து உத்தரவிட்டது.

 

The post நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 மகள்களை மீட்க கோரிய மனு தள்ளுபடி: தந்தை தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Gujarat High Court ,Nithyananda Ashram ,AHMEDABAD ,Nithyananda ,Kailash ,Janardhana Sharma ,Bengaluru ,Ashram ,Gujarat ,Sharma ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி