×

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி பேய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்: தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னவானது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை வண்டியூரில் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்  சு.வெங்கடேசனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழநாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார். கீழடி பெருமையை  உலகுக்கு எடுத்துச் சொன்னவர் தோழர் சு.வெங்கடேசன் என்றார்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி பேய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் ஒரு நகரில் கூட ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை, தமிழகத்தில் உதவாக்கரை ஆட்சி  நடைபெறுகிறது என்று தெரிவித்தார். கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு சீரழிந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரி, தருமபுரி  மாவட்டங்களில் கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள எடப்பாடி ஆட்சி கொட்டுப்போன ஆட்சி என்பதற்கு சான்றுதான் கர்ப்பிணிகள் உயிரிழப்பு என்று குற்றம் சாட்டினார்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்னவானது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நரேந்திர மோடி  ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. மோடி ஆட்சிக்கு வந்தப்பின் இந்தியாவை 45 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டுச்சென்றுவிட்டார். மோடி ஆட்சியில் 2018-ல்  வேலையில்லாதவர்களின் விகிதம் 6.1 சதவீதமாக உயர்ந்துவிட்டது. வேலை கேட்கும் இளைஞர்களை பக்கோடா விற்க சொல்லிக்கொண்டிருக்கிறது மோடி அரசு, பிரதமர் மோடியால் நாடு வளர்ச்சி அடையவில்லை; தளர்ச்சிதான்  அடைந்திருக்கிறது என்றார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் மட்டுமே நடப்பட்டுள்ளது, இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edapadi ,Tamilnadu ,demonstration ,Palaniasamy ,MK Stalin ,speech , Tamilnadu, Edappadi Palanisamy, election campaign, MK Stalin
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...