×

ஜப்பானின் மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்கடரில் 5.4ஆக பதிவு

ஜப்பான்: ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இன்று பிற்பகல் 3.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 அலகுகளாக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சிறிய அளவில் அவை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்துக்கு முன்னதாக இன்று காலை சுமார் 9 மனியளவில் மியாசாக்கி, எஹைம், கோச்சி, குமாமொட்டோ, ஓய்ட்டா உள்ளிட்ட பகுதிகளில் 3 முதல் 4 ரிக்டர் வரையிலான நில அதிர்வுகளும் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 5.9 ரிக்கடரில் நில நடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Japan ,district ,Miyazaki ,magnitude earthquake , Japan's Miyazaki,district,today,recorded,5.4 magnitude, earthquake
× RELATED குட்டி ஜப்பானில் தயாரிப்பு பணி தீவிரம் நோட்டு புத்தகம் விலை 25% உயர்வு