×

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ் : மு.க.ஸ்டாலின்

தேனி : தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பெரியகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை எதிர்த்து வாக்களித்தவர் தான் ஓபிஎஸ் என்றும், ஆட்சியை எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் துணை முதல்வராக இருக்க முடியுமா என கூறினார். மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ் சீட் வாங்கியிருக்க முடியுமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Palaniasamy ,MK Stalin ,OBC , Edappadi Palaniasamy, AIADMK, OPS, MK Stalin
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...