×

தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை : தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஜி.கே.வாசனின் தாமகா கட்சிக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மட்டும் சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த தமாகாவிற்கு தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது. இதையடுத்து சைக்கிள் சின்னைத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்தார். அதில் தஞ்சை தொகுதியில் மட்டுமே போட்டியிடும் தங்களுக்கு சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும், வேறு யாருக்கும் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறி சைக்கிள் சின்னத்தை தாமக பெற்றுள்ளது. ஆனால் வரும் மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளதால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அனுமதி இல்லை என நீதிபதி கூறியுள்ளார். எனவே தஞ்சை தொகுதிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டுமென்ற இடைக்கால கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்பது விரிவான கோரிக்கை என்பதால், அதில் அவசரமாக முடிவெடுக்க முடியாது என கூறிய நீதிபதி, இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamana ,Tanjore ,High Court , Tanjore Block, Cycling,TMC, High Court, GK Vasan
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...