×

திருச்சி எம்பி தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கோஷ்டி மோதல்: சேர்கள் வீச்சு

திருவெறும்பூர்: திருவெறும்பூர் பெல் வளாகத்தில் நடந்த திருச்சி எம்பி தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு கோஷ்டியினரும் சேர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி எம்பி தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் ஏடிபி தொழிற்சங்கத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து கோஷ்டியினருக்கும், அந்த கட்சியின் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் கோஷ்டியினருக்கும் இடையில் மேடையில் அமர்வதற்கு இடம் ஒதுக்கியது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இரு கோஷ்டியினரும் சேர்களை எடுத்து வீசி கொண்டனர்.பின்னர் கூட்ட அரங்கை விட்டு வெளியில் வந்தும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy MB ,Demetri Candidate Introductory Meeting Clash of Clash: Displays Arrow , Trich,y MB ,DMDM debut, meeting, Chairs
× RELATED தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு...