×

புதிய நூலகம் கட்டக் கோரிய வழக்கு: காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் கிளை ஆணை

தூத்துக்குடி: குளக்கட்டன்குறிச்சி பகுதியில் புதிய நூலகம் கட்ட கோரிய வழக்கில் காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை பரிசீலித்து 4 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதிய நூலகம் கட்ட ஒதுக்கிய இடம் காவல்துறை குடியிருப்புக்கு என ஒதுக்கப்பட்ட இடம் என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. காவல் குடியிருப்பு இடத்தை நூலகம் கட்ட தரக் கோரி எஸ்.பி.க்கு ஆட்சியர் பரிந்துரை அனுப்பியுள்ளார். இந்நிலையில், காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

The post புதிய நூலகம் கட்டக் கோரிய வழக்கு: காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Superintendent of Police ,Thoothukudi ,Kulakattankurichi ,Court ,Chief of Police ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...