×

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் கொசுக்கள், இறந்த காக்கைகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

புதுடெல்லி: கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலியானதையடுத்து, கொசுக்கள் மற்றும் இறந்த காக்கைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக ஆழப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவனது ரத்த மாதிரியை பரிசோதித்தபோது ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த  சிறுவன் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி அவன் கடந்த திங்கட்கிழமை இறந்தான். இந்தியாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்புக்கு  ஏற்பட்ட முதல் உயிர் பலி இதுவாக இருக்கலாம் என மத்திய சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி கேரளாவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ மத்திய மருத்துவ குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஜப்பானீஸ் என்செபாலிடிஸ், மஞ்சள் காய்ச்சல் மற்றும் செயின் லூயிஸ்  என்செபாலிடிஸ் போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய வைரஸ்தான் வெஸ்ட் நைல் வைரஸ். இது, பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும்,  கொசுக்கடி மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. மனிதர்களிடமிருந்து, மனிதர்களுக்கு பரவாது. இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தெரியாது. இதனால் மலப்புரம் மாவட்டத்தில் வெந்நியூர் பகுதியிலிருந்து கொசுக்கள், இறந்த காக்ககை உடல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக ஆழப்புழாவில் உள்ள ேதசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மலப்புரம்  மாவட்டத்தில் உள்ள கால்நடைத்துறை ஆய்வு மையத்தில் இறந்த காக்கைகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் மூளை, ஈரல், கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் இன்னும்  வெளியாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : West Nile ,virus mosquitoes ,Kerala , West Nile virus , Kerala
× RELATED வெஸ்ட் நைல், அமீபா காய்ச்சல் வாலிபர், சிறுமி பலி: கேரளாவில் பரபரப்பு