×

நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட கலைஞர், ஜெயலலிதாவே கேட்டாங்க...: பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி

`நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட எத்தனையோ முறை தலைவர்கள் என்னிடம் கேட்டனர். சாதாரண தலைவர்கள் இல்லை, கேட்டது கலைஞர், ஜெயலலிதா கேட்டார்கள்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடியாக  தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தக்கலையில் நிருபர்களிடம் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்காக வாழ்ந்து வளர்ச்சிக்காக போராடி இருந்து மறைந்துவிட்ட தலைவர்கள் நேசமணி, பொன்னப்பநாடார், நத்தானியேல், மகாதேவன்பிள்ளை போன்றவர்கள் இருந்தனர். அவர்கள் இங்கு இடம்  கிடைக்கவில்லை என்பதற்காக ஓடிப்போனவர்கள் அல்ல. வெற்றியோ தோல்வியோ நான் இங்கேயே இருப்பேன் என்றவர்கள், தங்கள் வாழ்க்கையையே இந்த மண்ணுக்காக ஒப்படைத்தவர்கள். ஆப்ரிக்காவில் இருந்து பறவைகள்  இங்கு வருகின்றன, அவை நமக்கு சொந்தம் என்று நாம் கூற முடியுமா, அவை சீசன் முடிந்ததும் போய்விடும். அந்தமாதிரி அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

நாங்குநேரி மக்களின் இன்றைய நிலை என்ன? அவர்கள் அனாதையாக விடப்படுகிறார்களா? காங்கிரஸ் எந்த மன நிலையோடு வேட்பாளர்களை நியமித்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அது அவர்களது விருப்பம், அதில்  தலையிட விரும்பவில்லை, ஆனால் இதுதான் உண்மை. நமது திட்டங்கள் நிறைவு பெற இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம். கேரளாவில் வரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வர மாட்டேன் என்கிறார்கள்,  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்ல கடல்மார்க்கமாக நீர்வழி போக்குவரத்திற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. 1998 முதல் பிற நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட எத்தனையோ முறை தலைவர்கள் என்னிடம் கேட்டனர். சாதாரண தலைவர்கள் இல்லை, கேட்டது கலைஞர், ஜெயலலிதா கேட்டார்கள். நீங்கள் ஏன் வெளிய  தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று இப்போதும் கேட்டனர். எந்த காரணத்தை கொண்டும் ஒரு போதும் முடியாது என்று கூறிவிட்டேன். எனது வெற்றியையும் எனது தோல்வியையும் நான் இந்த மாவட்ட மக்களுடைய  கணிப்பிலேயே விட்டுவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Artist ,Jayalalithaa ,Ponnarathakrishnan ,constituencies , Parliamentary,onstituencies, Artist, Jayalalithaa,Ponnarathakrishnan Vallaladi
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்