அரசு பள்ளிகளில் வாங்கப்பட்ட நாளிதழ்கள் எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் 2018-2019 கல்வியாண்டில் மாணவர்களின் பொது அறிவு, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசு செலவில் தினமும் நாளிதழ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வாங்கப்பட்ட நாளிதழ்களை பள்ளிகளுக்கு அருகில் உள்ள பழைய நாளிதழ்களை எடைக்கு வாங்கும் கடைகளில் விற்று அந்த பணத்தை டிடி-யாக எடுத்து வட்டாரக் கல்வி அலுவலங்களில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் தரும் டிடி-க்களை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Initial Education Directorate ,government schools , Government, schools, purchased, announcements, weight, sale, money, handover, primary education, directorship, directive
× RELATED வரலாற்று தகவல்களை...