மூணாறு அருகே இடமலை குடியில் குடியிருக்க வீடு இல்லை : பரிதவிக்கும் ஆதிவாசி பழங்குடி மக்கள்

மூணாறு: மூணாறு அருகே இடமலை குடியில் குடியிருக்க வீடு இல்லாமல் ஆதிவாசி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடு கட்டுவதற்கு அரசு சார்பாக நிதி ஒதுக்கியும் வீடு காட்டிக்கொடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக ஆதிவாசி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கேரள மாநிலத்தில் பழங்குடி ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் முக்கிய பகுதி இடமலை குடி. இங்கு 25 குடிகளும், 2000க்கும் அதிகமான ஆதிவாசி மக்களும் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பல குடும்பங்களுக்கு வீடு இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மூணாறில் பெய்த கனமழை மூலம் பல வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அடுத்த மழைக்காலம் துவங்க இன்னும் சில மாதங்கள் உள்ளது.

இதனால் வீடுகள் முற்றிலும் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் நலனுக்காக கேரள அரசு பலகோடி நிதி ஒதுக்கியும் அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதி ஆதிவாசி குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு அமைந்துள்ள வீடுகளின் பணிகள் நிறைவு பெறாத நிலையில் காணப்படுவதால், பழங்குடி மக்கள் மண் மற்றும் மரங்களை பயன்படுத்தி தற்காலிக குடில்கள் அமைத்து வசித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் காட்டு யானைகளுக்கு பயந்து பொழுதை கழிப்பதாக ஆதிவாசி மக்கள் கூறினார்.

இந்நிலையைக் குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தும், அவர்கள் அலட்சிம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர் இந்த நிலையை குறித்து குடியில் வசிக்கும் மோகன் கூறுகையில். வீடு காட்டிக்கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர்கள் வீடுகளை முழுவதும் கட்டிமுடிக்காமல் எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி சென்றுவிட்டனர். மேலும் வீடு கட்ட அரசு சார்பாக நிதி கிடைக்கவில்லை.எனவே, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு வீடு அமைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: