×

பெருஞ்சாணி வனத்தில் பரவி வரும் காட்டு தீ : அரிய வகை மரங்கள் நாசம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பெருஞ்சாணி வனத்தில் பரவி வரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள் நாசமடைந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வனத்துறை தக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் , சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரியுள்ளனர். இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் பரவி வரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், கோடிக்கணக்கான ருபாய் மதிப்பிலான மதிப்புள்ள அரசு ரப்பர் மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் வெயில்  காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில்  அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. ஏற்கனவே கீரிப்பாறை, பரளியாறு பகுதியில் உள்ள அரசு ரப்பர் மரங்கள் தீயில் கருகியநிலையில் பெருஞ்சாணி அருகே வனப்பகுதியில் தீ பரவியது.  இந்த காட்டு தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் மணலோடை ஆலம்பாறை பகுதியில்  அரசு ரப்பர் மரங்கள் தீயில் எரிந்து நாசமானது. அரசு ரப்பர் தோட்டங்களில் தீயை தடுக்க காய்ந்த செடி மற்றும் புற்களை வெட்டி அகற்றுவது வழக்கம். ஆனால் தற்போது அரசு ரப்பர் தோட்டங்களில் காய்ந்த செடி மற்றும் புற்களை வெட்டாததால் மணலோடி பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Forest fire spread ,forest , Wild fires, rare trees, destruction
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...