×

நோட்டாவுடன் போட்டி போடும் தமிழிசை: டிடிவி கிண்டல்

24 நாடாளுமன்ற மற்றும் 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு சென்னையில் நேற்று டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலில் பண மூட்டைகளை வைத்துக்கொண்டு மட்டுமே ஜெயித்து விட முடியாது. விரைவில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வரும் 27ம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் துவங்க உள்ளது. கட்சி நிர்வாகிகள் என்னிடம் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்கள். அதன்படி, தொண்டர்கள் விருப்பப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராய் உள்ளேன். இதேபோல், வரும் 22ம் தேதி எங்களின் தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு உள்ளது.

கடந்த 3 மாதங்களாக ஆலோசித்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் கூட்டணி அமைந்த அன்றே தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். நோட்டாவுடன் போட்டி போடும் தமிழிசையின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். ஆனால் ஆர்கே நகர் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசை கவிழ்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். எனவே, அவர் எம்பி தேர்தலில் போட்டியிட மாட்டார். அவர் பேட்டி ஒரு ஸ்டண்ட் என்று அவரது கட்சியினரே கூறுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Noda ,TTV Kundal , tamilisai, Nota, TTV
× RELATED திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத்...