×

தனியார் மருத்துவமனையில் தட்டுப்பாடு போக்க தமிழகத்துக்கு 15 லட்சம் கொரோனா தடுப்பூசி: அதிகாரிகள் தகவல்

சென்னை: , தமிழகத்துக்கு 15,5,400 கொரோனா தடுப்பூசி வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்கள பணியாளர்களுக்கு  மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு ஏற்கனவே அனுமதித்து இருந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.  அதன்படி தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மொத்தமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுவதால், தனி நபர்கள் பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகத் தெரிகிறது.இந்நிலையில், தமிழகத்துக்கு ஏற்கனவே 34 லட்சத்து 5 ஆயிரத்து 800 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சத்து 67 ஆயிரத்து 520 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்தன. தற்போது 8 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு இன்று 15 லட்சத்து 5 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் வருகிறது. அதில் 12,90,790 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 2,14,610 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. இந்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தவுடன் உடனே மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். …

The post தனியார் மருத்துவமனையில் தட்டுப்பாடு போக்க தமிழகத்துக்கு 15 லட்சம் கொரோனா தடுப்பூசி: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...