×

சென்னை தீயணைப்பு கருவி விற்பனையகத்தில் திடீர் தீவிபத்து

சென்னை: சென்னையில் தீயணைப்பு கருவி விற்பனையகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்தன. கீழ்ப்பாக்கத்தில் உள்ள அந்த கடையில் நேற்றிரவு வெடி சத்ததுடன் புகைமூட்டம் வெளியே வந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கடுமையா போராடியும் தீயணைப்பு கருவிகளில் உள்ள வேதிப்பொருள் காரணமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கையாக அருகில் இருந்த பொது மக்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மற்றும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீயணைப்பு கருவிகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Firefighters, firearms, firearms, firefighters, firefighters
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...